×

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,058 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்படுகிறது. 20 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக உபரிநீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இங்கு இன்று 2வது நாளாக நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 4வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அருவிகள், ஆற்றில் குளிக்க 2வது நாளாக தடை நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 12,444 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 5 மணிக்கு 15,232 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 18,058 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 65.01 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 65.53 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 28.98 டிஎம்சியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,058 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Mattur Dam ,18,058 ,Canadi ,Mattur ,Kaviri ,Wayanad ,Kerala ,Karnataka Dams ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...